Cricket Sports

TATA IPL 2025: விராட் அரைசதம்.. அபார வெற்றியுடன் துவங்கிய RCB.. 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த நடப்பு சாம்பியன் KKR!

7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி. விராட் அரை சதம் அடித்து ஆர்சிபி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஈடன் கார்டன்

TATA ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

KKR முதல் பேட்டிங்

ஆர்சிபி அணிக்கு கேப்டனாக பதவியேற்ற தன்னுடைய முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸில் தோல்வியை தழுவிய நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குவின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். டி காக் ஐந்து பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ஒரு பவுண்டரி மட்டுமே எடுத்த நிலையில், முதல் ஓவரிலேயே ஜோஷ் ஹேசல்வுட் பந்து வீச்சில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

கேப்டன் ரஹானே அரைசதம்

சுனில் நரைனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டிய ரஹானே அரைசதம் கடந்தார். சுனில் நரைன் 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்த நிலையில் 10 வது ஓவரில், ராசிக் சலாம் பந்து வீச்சில், ஜிதேஷ் சர்மாவிடம் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரஹானே 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் 11 வது ஓவரில் குருணால் பாண்டியா ஓவரில் ராசிக் சலாமிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

குருணால் பாண்டியா அசத்தல்

அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 6 ரன்கள் எடுத்த நிலையில், 12 வது ஓவரில் குருணால் பாண்டியா பந்துவீச்சில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். 13வது ஓவர் வரையிலும் கொல்கத்தா அணி 125 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அங்கிரிஷ் ரகுவன்ஷி 22 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில், யஷ் தயாள் பந்து வீச்சில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் குருணால் ஓவரில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணிக்கு கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் சுனில் நரைன் ஜோடி 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டியது.

ஆனால், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஆன்ட்ரே ரசல் 4, இரமன்தீப் சிங் 6, ஹர்ஷித் ராணா 5 ரன்களை மட்டுமே எடுத்து, தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்பென்சர் ஜான்சன் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக குருனால் பாண்டியா 3, ஹேசல்வுட் 2 விக்கெட்களும் வீழ்த்தினார். மேலும், யாஷ் தயாள், சுயாஷ் சர்மா மற்றும் ராசிக் சலாம் ஆகியோட் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

175 ரன்கள் இலக்கு

ஆர்சிபி அணி 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எளிய ஸ்கோரை நோக்கி களமிறங்கிய களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டத்தொடங்கினர். கொல்கத்தா அணியின் பந்து வீச்சை நாலாப்பாக்கமும் சிதறவிட்டனர். ஃபில் சால்ட் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 56 ரன்களை எடுத்த நிலையில், வருண் பந்து வீச்சில் ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து இம்ப்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 1 பவுண்டரியுடன் 10 ரன்களை மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

Virat அரைசதம்

மறுபுறம் நிதானமாக விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் இரஜத் படிதார் தன் பங்கிற்கு அதிரடி காட்டிய நிலையில், 1 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். லியாம் லிவிங்ஸ்டோன் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 5 பந்துகளில் 15 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்திலிருந்தார். சேஸ்மாஸ்டர் விராட் கோலி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த நிலையில், 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 59 எடுத்து பெங்களூரு அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிறகு 177 ரன்களை எடுத்து, முதல் வெற்றியை பதிவு செய்தது.

பந்துவீச்சில் சொதப்பிய KKR

வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆர்சிபி அணிக்கு ரன்களை வாரி வழங்கினர். இதன் மூலம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியது.

முதல் வெற்றி

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவிய நிலையில், இம்முறை முதல் லீக் போட்டியிலேயே முதல் வெற்றியுடன் ஆர்சிபி அணி தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் வெற்றியுடன் துவங்கியுள்ள ஆர்சிபி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் நன்றாக விளையாடி இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Author

Vasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

IPL Auction 2025 live streaming
Cricket

IPL 2025 Live Streaming | ஐபிஎல் மெகா ஏலம்… எங்கு.. எப்படி பார்க்கலாம்.. முழுவிவரம் இதோ..!

  • November 24, 2024
இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெறும்
IPL 2025 Auction Players List
Cricket

IPL 2025 Players List | ஐபிஎல் தொடர்.. தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்..? எவ்வளவு தொகை..? முழுவிவரம் இதோ..!

  • November 24, 2024
இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்திய வீரர்களில்