TN Assembly 2024 | டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் திமுக U- டர்ன் அடித்ததா?
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் போதிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பொதுமக்களே பேசதொடங்கியிருப்பது திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்றத்தில் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுகவை கடுமையாக தாக்கினார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று காலை தொடங்கியது. முதலில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். பிறகு காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் களைகட்ட தொடங்கியது. […]