Badam Pisin Payasam | வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..
பாயசம் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அந்த பாயசமே ஆரோக்கியம் தருவதாக இருந்தால் நல்லது தானே. அப்படிப்பட்ட ரெசிபியை தான் செய்ய போகிறோம். இந்த ரெசிபியில் உடலுக்கு நன்மை பயக்கும் அத்தனை பொருட்களும் இடம்பெற்றிருக்கின்றன. பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதை உடல் உஷ்ணத்தை குறைப்பதில் பெயர் பெற்றது. இந்த பாதாம் பிசினை வெறுமனே சாப்பிட சொன்னால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி கொஞ்சம் யோசிப்பார்கள். காரணம் பாதாம் பிசினுக்கு வாசனை மற்றும் சுவை கிடையாது. […]