இன்றைய டிஜிட்டல் உலகில், லேப்டாப் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. வேலை, கல்வி, கற்றல், பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர் என பல காரணங்களுக்காக லேப்டாப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். அப்படி பயன்படுத்தும்போது நம்மில் பெரும்பாலானோர் லேப்டாப்பை மடியின் மீது வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும். அது அப்போதைக்கு சௌகரியமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால், லேப்டாப் சாதனமும், மற்ற மின்னணு சாதனங்களைப் போலவே வெப்பம் மற்றும் மின்காந்த புலங்களை (Electromotive Force) வெளியிடுகின்றன. இவை, பின்னாளில் தீவிரமான உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும். தற்போது, லேப்டாப்பை நீண்ட நேரம் மடியின் மீது வைத்து பயன்படுத்துவதால் ஏற்படுத்துவால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
முதுகு மற்றும் கழுத்து வலி
லேப்டாப்பை மடியின் மீது வைத்து பயன்படுத்தும்போது நாம் குனிந்து தான் பார்க்க வேண்டும். இதனால், தோல்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகின்றன. மேலும், நீண்ட நேரம் குனிந்துக் கொண்டே இருப்பதால் முதுகு எலும்பில் அசௌகரியத்தை உண்டாகும். இதனால், கழுத்து மற்றும் முதுகு பகுதியில் கடுமையான வலியை அனுபவிக்க நேரிடும்.
புற்றுநோய்
லேப்டாப்பை மடியின் மீது வைத்து பயன்படுத்தும்போது அதில் இருந்து வெளியாகும் அதிகப்படியான வெப்பம் தொடைப் பகுதியில் உள்ள செல்களை சேதப்படுத்தும். இதனால், தோல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சரும பாதிப்புகள்
நீண்ட நேரம் லேப்டாப்பை மடியில் வைத்திருப்பது, அந்த பகுதியில் உள்ள தோல்களை மோசமாக பாதிக்கிறது. இதனால், எரிச்சல், தடிப்புகள், நிறமாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதேநிலை தொடர்ந்து நீடித்தால், ஸ்குவாமஸ் செல் தோல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
இனப்பெருக்க உறுப்பை பாதிக்கும்
லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தும் ஆண்களுக்கு அதில் இருந்து வரும் வெப்பம மற்றும் கதிர்வீச்சு இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் விந்தணுக்களின் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இது, செல்களை சேதப்படுத்தும் டெஸ்டிகுலர் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும், ஆண் மலட்டுத்தன்மைக்கும் வழிவகுக்கும்.
பெண்கள் கருவுறுதலில் பிரச்சனை
பெண்கள் நீண்ட நேரம் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதால், கரு முட்டை உற்பத்தியை தாமதப்படுத்தும். அது கரு தரிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்தும். குறிப்பாக, கர்ப்பிணிகள் லேப்டாப்பை மடியிலோ அல்லது வயிற்றுக்கு பக்கத்தில் வைத்து பயன்படுத்தும்போது, அதிலிருந்து வெளியாகும் EMF கதிர்வீச்சு வயிற்றுல் உள்ள குழந்தையை பாதிக்கலாம்.