சமீப காலமாகவே இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி பிராண்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதற்கு சியோமி ஸ்மார்ட்போன் சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதே முக்கிய காரணம். இந்தநிலையில், சியோமி (Xiaomi) நிறுவனம் தன்னுடைய புதிய ரெட்மி நோட் 14 சீரிஸ் (Redmi Note 14 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சீரிஸில் ரெட்மி நோட் 14 (Redmi Note 14), ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro+) ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த பதிவில் ரெட்மி நோட் 14 சீரிஸின் விலை எவ்வளவு, என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
Redmi Note 14 விவரக்குறிப்புகள்:
ரெட்மி நோட் 14 மாடலில் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே உள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7025 Ultra சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. செல்ஃபி எடுப்பதற்கு 16MP முன்பக்க கேமராவும், பின்பக்கம் 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் கொண்ட இரட்டை கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இறுதியாக, இந்த போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய, 5110mAh பேட்டரி இருப்பதாக சொல்லப்படுகிறது.
Redmi Note 14 Pro விவரக்குறிப்புகள்:
ரெட்மி நோட் 14 ப்ரோ மாடலானது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. டைமென்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட்டில் இயங்கக்கூடிய இந்த போனில் Dolby Vision மற்றும் HDR10+ வசதி இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் 50MP சோனி பிரைமரி சென்சார் (OIS உடன்), 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. அதே சமயம் முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், இந்த போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 5500mAh பேட்டரியை பேக் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Redmi Note 14 Pro+ விவரக்குறிப்புகள்:
டாப்-எண்ட் மாடலான ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. Snapdragon 7s Gen 3 சிப்செட்டில் இயங்கும் இந்த போனின் முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும், பின்புறத்தில் 50MP Omni Vision முதன்மை சென்சார் (OIS உடன்), 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் கொண்ட மூன்று டிரிபிள் டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. இது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 6200mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
தனித்துவமான அம்சங்கள்:
இதுமட்டுமல்லாமல், மூன்று மாடல்களிலும் பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக, சாதனத்தில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் மாடல்களில் சர்க்கிள் டு சர்ச் (Circle to search), AI கால் ட்ரான்ஸ்லேஷன் (AI Call Translation) மற்றும் AI சப்டைட்டில் (AI Subtitle) உள்ளிட்ட 20 AI அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மூன்று மாடல்களுமே ப்ளாக் ஷேட், கிரீன் மற்றும் பர்ப்பிள்/லாவண்டர் ஃபினிஸ் என மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை எவ்வளவு?
Redmi Note 14 விலையை பொறுத்தவரை, 6ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ. 21,999, 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலைரூ. 22,999 மற்றும் 8ஜிபி + 256ஜிபி கொண்ட டாப் வேரியண்டின் விலை ரூ. 24,999 என கூறப்படுகிறது.
Redmi Note 14 Pro விலையை பொறுத்தவரை, 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ. 28,999 மற்றும் 8ஜிபி + 256ஜிபி கொண்ட டாப் வேரியண்டின் விலை ரூ. 30,999 என கூறப்படுகிறது.
Redmi Note 14 Pro+ விலையை பொறுத்தவரை, 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ. 34,999 மற்றும் 8ஜிபி + 256ஜிபி கொண்ட மிட் வேரியண்டின் விலை ரூ. 36,999 மற்றும் 12ஜிபி + 512ஜிபி கொண்ட டாப் வேரியண்டின் விலை ரூ. 39,999 என கூறப்படுகிறது.