Recipes

Rava Coconut Burfi | 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்..

Rava Coconut Burfi with Jaggery Recipe in Tamil | 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்..
10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்..
  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவை மற்றும் பொட்டுக்கடலை இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • இரண்டையும் லேசாக ஆறவைத்து மிக்ஸி கரடுமுரடாக அரைத்துக் கொள்ளவும். ரொம்ப மென்மையாக அரைக்கக் கூடாது.
  • பின்னர், ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள வெல்லம் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
  • ஒரு டம்ளரில் சிறிதளவு தண்ணீர் பிடித்து, அதில் கொதிக்கக் கொண்டிருக்கும் பாகை ஒரு சொட்டுவிட்டு, அது கரையாமல் கெட்டியாக இருந்தால் பாகு தயார்.
  • இப்போது, துருவிய தேங்காய், ரவை மற்றும் பொட்டுக்கடலை பவுடர் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். 2 ஸ்பூன் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு கலவை நன்றாக இலகி வரும் அந்த சமயத்தில் அடுப்பை அனைத்துவிடவும். அந்த கலவையை, நெய் தடவிய தட்டில் ஊற்றி சமன் செய்யவும்.
  • 30 நிமிடங்கள் ஆறவிட்டு, செட் ஆனதும், ஒரு கத்தியை கொண்டு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • தித்திப்பான ரவா தேங்காய் பர்பி ரெடி! இதை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரத்திற்கு வைத்திருந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.

Author

Nandhinipriya Ganeshan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Badam Pisin Payasam Recipe in tamil | வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..
Recipes

Badam Pisin Payasam | வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..

பாயசம் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அந்த பாயசமே ஆரோக்கியம் தருவதாக இருந்தால் நல்லது தானே. அப்படிப்பட்ட ரெசிபியை தான் செய்ய போகிறோம். இந்த ரெசிபியில்
மிருதுவான கல்யாண வீட்டு கேசரி.. இந்த ஒரு பொருள் மறக்காம சேர்க்கணும்.. | Kalyana Kesari Recipe in Tamil
Recipes

Kalyana Kesari Recipe | மிருதுவான கல்யாண வீட்டு கேசரி.. இந்த ஒரு பொருள் மறக்காம சேர்க்கணும்..

என்னதான் நாம் வீடுகளில் கேசரி செய்தாலும், கல்யாண வீட்டு கேசரிக்கு அப்படி ஒரு மவுஸு. கல்யாண வீடுகளில் உணவு பந்தியின் போது கேசரி வைப்பார்கள். அந்த கேசரியை