இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான சுழற்பந்து ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மழையால் பாதிக்கப்பட்ட போது, இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
காபா நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியுடன் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், தமிழக வீரருமான 38 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் அனைத்து வகையான போட்டிகளிலும் நான் இந்தியாவுக்காக விளையாடுவது இன்றே கடைசி நாளாகும். ஒரு கிரிக்கெட் வீரர் என்னுள் மிச்சம் இருப்பதாக உணர்கிறேன். கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் அதை வெளிப்படுத்த விரும்புகிறேன். நான் ரோஹித் மற்றும் எனது சக வீரர்களுடன் இதுவரையிலும் நிறைய நினைவுகளை பகிர்ந்துள்ளேன்.
ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், பிசிசிஐ நிர்வாகம் எக்ஸ் தளத்தில் அஷ்வினுக்கு நன்றி தெரிவித்துள்ளது. அந்த பதிவில், இந்திய கிரிக்கெட்டுக்கு அஸ்வினின் பங்களிப்புக்காக பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப்படைத்த அஷ்வினுக்கு நன்றி தெரிவித்துள்ள பிசிசிஐ அவரது அடுத்தக்கட்ட புகழ்பெற்ற வாழ்க்கைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 6 சதங்கள், 14 முறை அரை சதம் உட்பட 3,506 ரன்கள் குவித்துள்ளார். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவர், 8 முறை அவர் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சென்னையில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தபோது சதம் விளாசி தனி ஆளாக இந்திய அணியைக் காப்பாற்றினார்.
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த ரவிசந்திரன் அஷ்வின் கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியால் ஏலத்தில் எடுப்பட்டார். அஸ்வின் ஆரம்பத்தில் சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த நிலையில், தற்போது மீண்டும் ஐபிஎல் போட்டிக்காக சென்னை அணியில் விளையாடும் நாளை எதிர்பார்த்திருந்த அஸ்வின் ரசிகர்களுக்கு அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.