தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. ஒவ்வொரு வருடமும் போகிப் பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நான்கு நாட்களில் தைப் பொங்கல் அன்று தான் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
அதனால், தைப்பொங்கலை சூரிய பொங்கல் என்றும் சொல்வார்கள். அந்த வகையில், இந்த வருடம் தைப்பொங்கல் திருநாள் தை 01 ஆம் தேதி (ஜனவரி 14,2025) கொண்டாடப்படவுள்ளது. தற்போது இந்த பதிவில் பொங்கல் வைக்க உகந்த நேரம் மற்றும் பூஜை முறை குறித்த தகவல்களை தெரிந்துக் கொள்வோம்.
பொங்கல் வைக்க உகந்த நேரம் 2025:
பொங்கல் வைக்க உகந்த நேரம் 2025 என்று பார்த்தால் ஜனவரி 14 ஆம் தேதி காலை 07.30 – 08.30 மணி மற்றும் 10.30 – 11.30 மணி ஆகிய நேரங்களை பொங்கல் வைக்க பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும்,இந்த நேரத்தில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் பூஜையும் செய்துக்கொள்ளலாம். இந்த நேரத்தினை தவற விட்டவர்கள் மாலை 04.30 – 05.30 உபயோகித்து கொள்ளலாம்.
இதையும் படிங்க | Why Pongal 2025 is Celebrated | பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?