எதிர்காலத்தில் நடக்கும் சில விஷயங்களை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட தீர்க்கதரிசிகள் பலர் அந்த காலத்தில் வாழ்ந்துள்ளனர். அவர்களுடைய கணிப்புகள், அவர்கள் இறந்த பின்னரும் பரவலாகப் படிக்கப்பட்டு வருகின்றன. காரணம், அவர்கள் கணித்த கணிப்புகளில் பல உண்மையாகி உலகையே வியப்பில் ஆழ்த்துவது தான்.
அப்படி உலகமே வியக்கும் கணிப்புகளை சொல்வதில் பிரபலமானவர் தான் தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது Les Propheties என்ற புத்தகத்தில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டுச் சென்றார்.
விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்றெல்லாம அறியபபடும் இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம். அந்தவகையில், வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் தற்போது மக்களிம் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நீண்ட கால போர் முடிவுக்கு வரும்..
2024 ஆம் ஆண்டில் உலகில் ஒரு போர் நடக்கும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணித்திருந்தார். அது உண்மையாக்கும் விதமாக ரஷ்யா-உக்ரைன் போர் இருந்தது. அதேபோல், 2025 ஆம் ஆண்டில் நீண்டகால போர்களில் ஒன்று முடிவுக்கு வரும் என்று கணித்துள்ளார். போரினால் ஏற்பட்ட சோர்வு மற்றும் பொருளாதார இழப்புகள் காரணமாக இரு தரப்பினரும் சமாதானத்திற்கு வரக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ரஷ்யாவிற்கு, உக்ரைனுக்கும் இடையேயான போர் இந்தாண்டு முடிவுக்கு வரும் என்று ஊகிக்கப்படுகிறது.
பூமியை தாக்கும் விண்கல்..
நோஸ்ட்ராடாமஸின் மற்றொரு முக்கியமான கணிப்பு, 2025 ஆம் ஆண்டில், ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்கும் என்பதாகும். அதை, “பிரபஞ்சத்திலிருந்து விழும் நெருப்பு பந்து” என்று உருவகப்படுத்தி காட்டியுள்ளார். இந்த கணிப்பு மட்டும் உண்மையானால், பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவருடைய இந்த கணிப்பு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பயங்கரமான இயற்கை பேரழிவுகள்..
அதேபோல், 2025 இல் பிரேசில் நாட்டில் பயங்கரமான வெள்ளம், காலநிலை மாற்றம், எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை பேரழிவுகளை சந்திக்கும் என்று கணித்துள்ளார். உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளது. ஒருவேளை இதுபோன்ற பேரழிவுகளை சந்தித்தால், சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்று அஞ்சப்படுகிறது.
எந்திரங்களின் புரட்சி..
2025 ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றத்தால் உலக மக்கள் பல மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கணித்துள்ளார். இதை “எந்திரங்கள் உயரும்” என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
கொடிய தொற்றுநோய்..
அவருடைய கணிப்புகளில் மிகவும் கவலை அளிப்பது என்னவென்றால், இங்கிலாந்து நாட்டைப் பற்றியது தான். 2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு போர்கள் மற்றும் ஒரு கொடிய தொற்றுநோய் ஏற்படக்கூடிய ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளார். இந்த தொற்றுநோய் போரை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். இது உலக மக்களிடையே பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கணிப்புகள் எதிர்காலத்தைப் பற்றிய துல்லியமான பார்வைகளா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.