இன்றைய காலக்கட்டத்தில், மக்கள் அனைவருமே தங்களுடைய எதிர்கால தேவைக்காக பணத்தை சேமிக்க நினைக்கிறார்கள். அதற்காகவே நம்பகமான முதலீட்டு திட்டத்தை தேடி வருகின்றனர். அத்தகைய திட்டங்களும் அரசாங்க திட்டங்களாக இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றனர். அப்படி பணத்தை முதலீடு செய்யும்போது, பெரும்பாலான மக்கள் தேர்வு செய்யும் நிறுவனமாக எல்ஐசி இருந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருவதே. இதன் வாயிலாக குறைந்த முதலீட்டின் மூலம் பெரிய அளவில் லாபத்தை பெற முடியும். அப்படி ஒரு முதலீட்டு திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
திட்டத்தின் பெயர் என்ன?
எல்ஐசி நிறுவனம் வழங்கும் அந்த திட்டத்தின் பெயர் ‘ஜீவன் பிரகதி திட்டம்’ (LIC Jeevan Pragati Scheme). நீங்க புதிதாக பாலிசி எடுக்க திட்டமிட்டிருந்தால், இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஏனென்றால், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட முடியும். அதாவது, தினமும் ரூ.200 முதலீடு செய்தால் திட்டத்தின் முடிவில் ரூ. 28 லட்சம் லாபம் கிடைக்கும். மேலும், 12 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் எல்ஐசியின் இந்த ஜீவன் பிரகதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆபத்துக் காப்பீடும் கிடைக்கிறது.
எத்தனை ஆண்டுகள் டெபாசிட் செய்யலாம்?
வாழ்நாள் முழுவதும் நல்ல வருமானத்தை தரும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு எல்ஐசியின் ஜீவன் பிரகதி பாலிசி ஒரு குட் சாயிஸ். இந்த திட்டத்தின் கீழ் நீங்க தினமும் ரூ.200 டெபாசிட் செய்தால், ஒரு மாதத்திற்கு மொத்த தொகை ரூ.6000 ஆக இருக்கும். அதுவே ஒரு வருடத்திற்கு டெபாசிட் செய்யப்பட்ட தொகையாக ரூ.72,000 ஆக இருக்கும். இவ்வாறு தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்வதன் மூலம் மொத்த தொகை ரூ.14,40,000 ஆக இருக்கும்.
எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில் குறைந்தபட்சமாக 12 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம். ஆகவே, இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் முதலீடு தொகை அனைத்து பலன்களை சேர்த்து ரூ.28 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.
ஜீவன் பிரகதி திட்டத்தின் மற்றொரு சிறப்பு:
எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், உங்களுக்கு இரண்டு காப்பீடுகள் வழங்கப்படுகின்றன. அதாவது, இந்த பாலிசியை பயன்படுத்தி முதலீடு செய்த நபர் 0 – 5 வருடங்களுக்குள் இறந்து விட்டால் 100 சதவீதமும், 5 – 10 வருடங்களுக்குள் இறந்துவிட்டால் 125 சதவீதமும், 11 – 15 வருடங்களுக்குள் இறந்துவிட்டால் 150 சதவீதமும், 16 – 20 வருடங்களுக்குள் இறந்தவிட்டால் 200 சதவீதம் அடிப்படைத் தொகை கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல், வருடத்திற்கு ஒருமுறை முதலீடு செய்பவர்களுக்கு 2% தள்ளுபடியும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முதலீடு செய்பவர்களுக்கு 1% பிரீமியம் தள்ளுபடியும் கிடைக்கும்.
எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்க அருகில் உள்ள எல்ஐசி அலுவலங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியிருக்கும். அங்கிருந்து திட்டத்திற்கு தேவையான விண்ணப்ப படிவத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, அத்துடன் ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பாஸ்புக், மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து முதலீட்டு தொகையுடன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.