அது என்னவோ தெரியவில்லை கொரியாவில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி பட்டுபோன்று, மென்மையான சருமத்தை கொண்டிருப்பார்கள். அப்படி அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று வலைத்தளங்களில் தேடுபவர்களும் உண்டு. அவர்களுக்காகவே இந்த பதிவு. கொரியப் பெண்களை போன்று மென்மையான பேபி ஸ்கின்னை (baby skin) பெற நீங்க எந்த க்ரீம்களையும் பயன்படுத்த வேண்டியது இல்லை. வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமே போதுமானது. அந்த பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி வந்தாலே உங்களுடைய சருமமும் கண்ணாடி போன்று ஜொலிக்கும்.
பால், எலுமிச்சை சாறு ஃபேஸ் மாஸ்க்
ஒரு பௌலில் 2 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிறிய பஞ்சை அதில் நனைத்து முகம், கை மற்றும் கால் பகுதிகளில் தடவவும். அதை 15 நிமிடங்கள் அப்படியே காயவிட்டு, சோப்பு பயன்படுத்தாமல் தண்ணீரில் மட்டும் கழுவிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
கோகோ பட்டர், ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
1 ஸ்பூன் கோகோ பட்டர், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் சேர்த்து, பேஸ்ட்டாக கலந்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பஞ்சை நனைத்து, முகம் முழுவதும் தடவிக் கொள்ளவும். 10 நிமிடங்கள் ஊறவிட்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். இந்த செயல்முறையை வாரத்திற்கு 1 முறையாவது முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
கற்றாழை ஜெல், தேன் மாஸ்க்
கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்ளவும். அந்த ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது தண்ணீர் மாதிரி வலுவலுப்பாக இருக்கும். அத்துடன் 2 சொட்டு தேன் சேர்த்து கலந்து, அதை முகத்தில் அப்ளை செய்துக் கொள்ளவும். 10-15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பிறகு சோப்பு எதுவும் பயன்படுத்தாமல், வெறுமனே தண்ணீரில் மட்டும் முகத்தை வாஷ் செய்துக் கொள்ளுங்கள். வாரத்தில் 2 முறை செய்யலாம்.
தேன், ஓட்ஸ் ஃபேஸ் பேக்
2 ஸ்பூன் ஸ்பூன் தேன், 1 கப் ஓட்ஸ் மற்றும் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பேஸ்ட் மாதிரி கலக்கியதும், அதை முகத்தில் தடவில் 15 – 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, குளிர்ந்த தண்ணீரால் கழுவிக் கொள்ளவும். மறக்காமல் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். இதை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வரலாம்.
அவகேடோ, ஆலிவ் ஆயில் ஃபேஸ் பேக்
1 அவகேடோ பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அந்த பேஸ்ட்டுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 சொட்டு தேன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவில் 20 நிமிடங்கள் காயவிட்டு, குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவிக் கொள்ளவும். இந்த செயல்முறையை வாரத்தில் 2 முறை செய்தால் இரட்டிப்பு பலனை பெறலாம்.