படம் : சீதா ராமம் (Sita Ramam)
பாடகர் : சாய் விக்னேஷ்
இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
Kamban Solla Vanthu Song Lyrics in Tamil:
ஆண் : குருமுகில்களை சிறுமுகைகளில்
யார் தூவினார்
மழைகொண்டு கவிதை தீட்டினார்
ஆண் : இளம்பிறையினை இதழ் இடையினில்
யார் சூட்டினார்
சிரித்திடும் சிலையை காட்டினார்
ஆண் : எறும்புகள் சுமந்து போகுதே
சர்க்கரை பாறை ஒன்றினை
இருதயம் சுமந்து போகுதே
இனிக்கிற காதல் ஒன்றினை
ஆண் : என் சின்ன நெஞ்சின் மீது
இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்
குழு : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலவை கூட்டி வந்ததார்
ஆண் : கம்பன் சொல்ல வந்து
ஆனால் கூச்சங்கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
வர்ணம் சேர்க்கும்போது
வர்மன் போதை கொள்ள
முடியா ஓவியமும் நீ
ஆண் : எலோரா சிற்பங்கள்
உன் மீது காதலுறும்
உயிரே இல்லாத கல்கூட காமமுறும்
ஆண் : உன் மீது காதல் கொண்ட
மானுடன் தான் என்ன ஆகுவான்
குழு : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலவை கூட்டி வந்ததார்
ஆண் : உடையால் மூடி வைத்தும்
இமைகள் சாத்தி வைத்தும்
அழகால் என்னை கொல்கிறாய்
ஆண் : அருவி கால்கள் கொண்டு
ஓடை இடையென்றாகி
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்
ஆண் : கடலில் மீனாக
நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி
உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுகொள்ள
ஏழு கோடி ஜென்மம் வேண்டும்
குழு : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா
வானோடு தீட்டி வைத்ததார்
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
நிலவை கூட்டி வந்ததார்