ரஷ்ய எண்ணெயை இறக்குமதி உக்ரைன் போருக்கு உதவுவதாக குற்றம்சாட்டி இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், உக்ரேனுக்கான டீசல் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் உக்ரேனின் டீசல் இறக்குமதியில் 15.5% பங்களிப்புடன் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளதாக அந்நாட்டின் எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான NaftoRynok தெரிவித்துள்ளது.
உக்ரேனுக்கு இந்திய டீசல்: முக்கிய புள்ளிவிவரங்கள்
2025 ஜூலை மாதத்தில் உக்ரேனின் டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு: 15.5%** (தினசரி சராசரியாக 2,700 டன்).
2025 ஜனவரி-ஜூலை காலகட்டத்தில் இந்தியாவின் பங்கு: 10.2%
2024-ல் வெறும் 1.9%-ஆக இருந்த இந்த அளவு வியத்தகு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
உக்ரைனின் முக்கிய டீசல் சப்ளையர்கள்:
- இந்தியா (15.5%)
- சிலோவாக்கியா (15%)
- கிரீஸ் (13.5%)
- துருக்கி (12.4%)
- லிதுவேனியா (11.4%).
உக்ரைனில் ரஷ்ய எண்ணெய்க்கு தடை இருந்தாலும், மூன்றாம் நாடுகள் வழியே உக்ரைன் அதன் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்துவருவதாக, NaftoRynok ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
As Ukraine navigates its energy challenges, it continues to seek alternative fuel sources.