Tamil Nadu

EVKS Elangovan Political Journey | பெரியாரின் பேரன் முதல் மத்திய அமைச்சர் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்..

EVKS Elangovan Political Journey: பெரியாரின் பேரன் முதல் மத்திய அமைச்சர் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்..
பெரியாரின் பேரன் முதல் மத்திய அமைச்சர் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்..

ஈவிகேஎஸ் இளங்கோவன் 1948 ஆம் ஆண்டு, டிசம்பர் 21 ஆம் தேதி ஈரோடு கோபிசெட்டிபாளைத்தில் பிறந்தார். இவர், தந்தை பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவர். தமிழகத்தின் முக்கிய அரசியல் வாதியான ஈ.வி.கே.சம்பத் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த சுலோசனாவின் மகன் என பின்புலத்துடனே இளங்கோவன் வளர்ந்தார். சென்னை உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் பயின்ற இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்தார்.

கல்லூரி காலத்திலிருந்தே அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இளங்கோவன் பட்டப்படிப்பை முடித்த பிறகு, சிவாஜியை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு, காங்கிரஸ் கட்சியிலும் தன்னை ஐக்கியமாக்கி கொண்டார். பிறகு சிவாஜி கணேசனின் பரிந்துரையின் பேரில், 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், முதன் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பாக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிட்டியது. இந்த தேர்தலில், திமுக வேட்பாளர் டி.கே.சுப்ரமணியம் பெற்ற வாக்குகளைவிட இரண்டு மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி வாகைச் சூடினார்.

1987-ல் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த போது, அதிகமு-வில் பிளவு ஏற்பட்டது. அப்போது, ஜானிகி அம்மையாருக்கு ஆதரவாக சிவாஜி களமிறங்கினார். அதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜானகி அம்மையாரை தேர்வு செய்ய வேண்டும் என்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமைக்கு சிவாஜி கோரிக்கை வைத்தார். ஆனால், ஒருங்கிணைந்த அதிமுகவையே நாங்கள் ஆதரிப்போம் என்று கூறி, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க மறுத்தது. இதனால் கடுப்பான சிவாஜி, ஜானகிக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். அவருடன் ஈவிகேஎஸ் இளங்கோவனும் காங்கிரஸில் இருந்து வெளியேறிவிட்டார்.

அதன்பிறகு, சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கினர். சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சி அதிமுக ஜானகி அம்மையாரின் அணியுடன் கூட்டணி சேர்ந்து 1989 சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியின் வேட்பாளராக பவானிசாகர் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் வெறும் 7 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று இளங்கோவன் படுதோல்வியை சந்தித்தார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து, சிவாஜி கணேசன் தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை ஜனதா தளம் கட்சியோடு இணைத்துக் கொண்டார்.

ஆனால், இளங்கோவன் மட்டும் அதிலிருந்து பிரிந்து தனது தாய் கட்சியான காங்கிரஸிலேயே மீண்டும் இணைந்துக் கொண்டார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்த விரக்தியால் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடாமல் இருந்த இளங்கோவன், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியை சந்தித்தார். அத்தேர்தலின் தோல்விக்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் கருத்துமோதல் ஏற்பட்டு, வேறு கட்சிகளுக்கு சென்று விட்டனர். இதனால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சோனியா காந்தி நியமனம் செய்தார்.

1996 முதல் 2001 வரை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செயல்பட்ட இளங்கோவன், 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.பி ஆனார். காங்கிரஸ் மாநிலத் தலைவராக சிறப்பாக செயல்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், பல்வேறு காரணங்களுக்காக திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பிறகு, 2009 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இளங்கோவனுக்கு தோல்வியே கிடைத்தது. 2014–2017 வரையிலான காலகட்டத்தில் மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற இளங்கோவன், 2016 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக–காங்கிரஸ் கூட்டணியில் 41 தொகுதிகளை திமுக-விடம் இருந்து கட்டாயம் செய்து வாங்கினார்.

அந்த சமயத்தில், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைத்து தவறாக பேசியதால், 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் தோல்வியை சந்தித்தாக கூறப்பட்டது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் இளங்கோவனுக்கு தோல்வியே கிடைத்தது. அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவரது மூத்த மகன் திருமகன் ஈவேரா, மாரடைப்பால் மரணம் அடைந்ததால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இளங்கோவன், கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் கழித்து 66,575 வாக்குகள் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றார்.

இப்படி அரசியலில் படிப்படியாக முன்னேறிய இளங்கோவன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அதற்காக தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணியளவில் காலமானார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானது தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Nandhinipriya Ganeshan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

TN Assembly 2024 | டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் திமுக U- டர்ன் அடித்ததா?
Tamil Nadu

TN Assembly 2024 | டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் திமுக U- டர்ன் அடித்ததா?

  • December 10, 2024
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் போதிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பொதுமக்களே பேசதொடங்கியிருப்பது திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
சட்டமன்றத்தை முடக்கும் திமுக அரசு…காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகள்..
Tamil Nadu

DMK | சட்டமன்றத்தை முடக்கும் திமுக அரசு.. காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகள்..

  • December 18, 2024
10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் எதை வேண்டுமானாலும் வாக்குறுதியாக அள்ளி வீசி மக்களை ஏமாற்றலாம் என்ற முனைப்பில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை திமுக எதிர்கொண்டு