திருச்சி- சென்னை தாம்பரம் இடையே 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மார்ச் 29, 30, 31 ஆகிய நாட்களில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறு மார்க்கத்தில் மாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.
இதேபோல, மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது மறு மார்க்கத்தில் மார்ச் 31ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் புறப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை குறைக்க இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கியுள்ளது.