ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவின் 3 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
CSK vs MI
TATA IPL 2025 டி20 கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படும். அப்படி ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்றையப்போட்டி மிகுந்த விருந்தாக அமையும். ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியிருந்தாலும், El Clasico என்று அழைப்படும் இன்றைய போட்டியே ஐபிஎல் ரசிகர்களுக்கு தொடக்க ஆட்டம் போல உள்ளதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஏகோபித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் IPL தொடரில் CSK vs MI அணிகள் மோதும் முதல் போட்டியும் 3-வது லீக் போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
UNCAPTED PLAYER – தோனி
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஆக்ஷனுக்கு பிறகு சிஎஸ்கே அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான தீபக் சாகர், ரஹானே, ஷர்துல் தாகூர் போன்றவர்கள் வேறு அணிக்கு சென்ற நிலையில், அஷ்வின், சாம் கரண் போன்ற பழைய வீரர்களின் வரவு ரசிகர்களுக்கு மகிச்சியை கொடுத்துள்ளது. இம்முறை CSK அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்மேனுமான தோனி UNCAPTED PLAYER – ஆக களம் காண்கிறார்.
தீவிர பயிற்சி
ருதுராஜ் கெய்ட்வாட் தலையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு IPL தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று 6 முறையாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில், ஹோம் கிரண்வுடில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெறும் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியுடன் இன்று மோதுகிறது. தலா 5 கோப்பைகளை வென்ற இரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டியைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
கேப்டன் சூர்யகுமார்
கடந்த சீசனில் 3 ஆட்டங்களில் ஓவர்கள் வீச மும்பை அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை வழி நடத்துகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னனியில் இருக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.