கோவையில் தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த கடத்தப்பட்ட குழந்தையின் தந்தை. பின்னர் செய்தியாளர்களும் பேசும்போது:
கடந்த, சனிக்கிழமை தன்னுடைய குழந்தை தன்னிடம் வேலை செய்த டிரைவரால் கடத்தப்பட்ட சமயத்தில், துரிதமாக செயல்பட்டு தன்னுடைய மகனை மீட்டுக் கொடுத்த, காவல் துறை ஆணையாளர், பிற காவலர்கள், மற்றும் நுண்ணறிவு பிரிவு அதிகாரி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும். கோவை போலீசாரின் துரிதமான நடவடிக்கையால் மட்டுமே தன்னுடைய மகனை உயிரோடு பார்க்க முடிவதாகவும், அதனால் அவர்களுக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினார்.
குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் இருப்பதாக கூறுகிறார்களே என்று கேள்விக்கு,
பணம் கேட்கப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி, டிரைவர் என்னிடம் வேலைக்கு சேர்ந்தே பத்து நாள் தான் ஆகி இருக்கிறது. என்னிடம் வேலை பார்க்கும் மற்றொருவர் மூலமாக குடும்ப கஷ்டத்திற்காக வேலை கேட்டு அந்த டிரைவர் வேலைக்கு சேர்ந்து இருந்தார். வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்தில் டியூ கட்டுவதற்கு பணம் தேவைப்படுவதாக என்னிடம் கேட்டு 14 ஆயிரத்து நூறு ரூபாய் பணம் பெற்று இருக்கிறார், மற்றபடி அவர்கள் கூறுவது போல நான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது எல்லாம் உண்மை இல்லை என கூறினார். வதந்தியான செய்தியை 100% பரவி இருக்கிறது என கூறினார்.
குழந்தையை கடத்தி எங்கு வைத்து இருந்தார்கள் என்ற கேள்விக்கு,
குழந்தையை டியூஷனில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறி சென்றார், என்னுடைய கிரெடிட் கார்டை பெட்ரோல் போடுவதற்காக கொடுத்து அனுப்பி இருந்தேன். கார்டை ஆபீஸில் கொடுத்து விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி அழைத்துச் சென்று உள்ளார். என்னுடைய ஆபீஸ் வரும் வழியிலேயே பாதியிலேயே ரூட் மாறும்பொழுது என்னுடைய மகன் கேட்டு இருக்கிறார், இல்லை உன்னுடைய தந்தை வேறு இடத்திற்கு அழைத்து வரச் சொல்லி இருக்கிறார் என்று சொல்லியே அவர் கூட்டி சென்று இருக்கிறார். கிட்டத் தட்ட குழந்தையை பவானி வரை குறுக்கு வழிகளிலேயே அழைத்துச் சென்று விட்டார். ஒரு கட்டத்தில் குழந்தைக்கு தெரிந்து விட்டது. தான் கடத்தப்படுவதாக, ஆனால் அவர் தப்பிக்க முயற்சி செய்யவில்லை. லாஜிக்கலாக சிந்தித்து குழந்தை பத்திரமாக இருக்கவே முயற்சி செய்து இருக்கிறார்.
என்னிடம் பணம் பறிப்பதற்காகவே, பையனை கடத்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த அவருடைய மொபைல் ஆன் செய்யப்படும் பொழுது போலீசார் அவனை ட்ராக் செய்தனர். இதில் கோவை போலீசார் மிகவும் துரிதமாக செயல்பட்டு என்னுடைய மகனை மீட்டு கொடுத்தனர்.
எட்டு மாவட்டங்களுக்கும் தகவல் கொடுத்து, அனைத்து வண்டிகளையும் சோதனை இட்டு என் மகனை மீட்டு கொடுத்து உள்ளனர். அதே போல, பவானி இன்ஸ்பெக்டர் கவிதா கடத்தல் வண்டியில் இருந்து என்னுடைய மகனை மீட்டுக் கொடுத்தார். அனைத்து காவல் துறையினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.