Dandelion Root Benefits in Tamil: மூலிகைகளில் அதிக மகத்துவம் பெற்ற மூலிகையாக சீமைக் காட்டு முள்ளங்கி கருதப்படுகிறது. இதை ‘டேன்டேலியன்’ (Dandelion) என்று சொல்வார்கள். இந்த மூலிகை செடியின் இலைகள் மற்றும் பூக்களை விட வேரில் தான் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இவை நமக்கு பசியைத் தூண்டவும், கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள நச்சுத்தன்மையை போக்கவும் உதவி புரிகின்றன. தற்போது, இந்த பதிவின் மூலமாக சீமைக் காட்டு வேரின் நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
சர்க்கரையை நோயை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அற்புதமான மருந்து என்றே சொல்லலாம். காரணம் இந்த சீமைக் காட்டு முள்ளங்கி வேரில் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே குறைக்கக் கூடிய தன்மை உள்ளது.
இதயத்தை பாதுகாக்கும்
நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் இந்த டேன்டேலியன் வேருக்கு உள்ளது. எனவே, தொடர்ந்து இந்த வேரை உட்கொண்டு வந்தால் வெகு சீக்கிரமே வெயிட்டை குறைக்க முடியும். அத்துடன், இரத்த நாளங்களில் எந்தவித நோய்களும் தாக்காமல் பாதுகாக்கிறது. இதனால், இதய வால்வு நோய், இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்கள்[1] ஏற்படுவதை தடுக்கலாம்.
கல்லீரல் நோயைத் தடுக்கும்
சீமைக் காட்டு முள்ளங்கியில் taraxasterol என்ற மூலப் பொருள் உள்ளது. இது சிறுநீரகங்களில் ஏற்படக்கூடிய கற்களை கறைக்கும் தன்மை கொண்டது. மேலும், சிறுநீரக பாதையில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளையும் தடுக்கிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த வேர் உதவுகிறது. இதனால் கல்லீரல் செயலிழப்பு போன்ற கல்லீரல் நோய்கள்[2] வராமல் தடுக்கலாம்.
பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து
டேன்டேலியன் வேரில் உள்ள சில மூலப் பொருட்கள் பெருங்குடலில் உருவாகக் கூடிய புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை[3] முற்றிலுமாக தடுக்க உதவுகின்றன. அத்துடன், நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த வேரை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
சரும ஆரோக்கியத்திற்கு
இந்த வேரில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் உடலின் செல்களை சேதப்படுத்தி, வயதான தோற்றத்தை தரக்கூடிய தீங்கு விளைவுக்கும் UVB கதிர்களிடம் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல், UVB கதிர்களால் சேதமடைந்த சருமத்தை விரைவில் குணப்படுத்தவும் உதவுகிறது.
சீமைக் காட்டு முள்ளங்கி வேரை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?
டேன்டேலியன் வேரை கஷாயம் அல்லது டீ தயாரித்து தினமும் 2 முறை குடிக்கலாம். இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. இருப்பினும், டேன்டேலியன் வேர் மாத்திரைகள், காப்ஸ்யூல்கள் போன்ற சப்ளிமென்ட்ஸ் வடிவிலும் கிடைக்கின்றன. என்னதான் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், இந்த வேர் சில மருந்துகளுடன் எதிர்வினை செய்யக்கூடிய[4] தன்மை வாய்ந்தது.
அதுமட்டுமல்லாமல், டேன்டேலியன் வேர் சப்ளிமெண்ட்ஸை அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, இரப்பை கோளாறுகளை உண்டாக்கும். எனவே, சப்ளிமெண்ட்ஸாக எடுத்துக் கொள்ளும்போது மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம்.
குறிப்பு: குழந்தைகள் அல்லது கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் டேன்டேலியன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க | கர்ப்பிணி பெண்கள் அவகேடோ பழம் சாப்பிடலாமா?