சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதால், சமீப காலமாகவே சியோமி பிராண்டிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், சியோமி நிறுவனம் Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro என்ற இரண்டு மாடல்களை சென்ற அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டும் இந்தியாவில் 2025 புத்தாண்டு ஸ்பெஷலாக ஜனவரி மாதம் ஆரம்பத்திலேயே வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த பதிவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியாக உள்ள சியோமி 15 சீரிஸ் (Xiaomi 15 Series) மாடல்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது, விலை எவ்வளவு என்பதை தெரிந்துக் கொள்வோம்.
Xiaomi 15 விவரக்குறிப்புகள்:
Xiaomi 15 ஆனது LTPO 120Hz ரெஃப்ரஸ் ரேட்டுடன் கூடிய பிளாட் TCL M9 3.36-இன்ச் AMOLED டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 1.5K ரெசல்யூஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இந்த மாடலில் 90 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. பேட்டரியை பொருத்தவரையில், 5,400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. Octa-core Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இயக்கப்படும் Xiaomi 15 மாடல் 12ஜிபி அல்லது 16ஜிபி ரேம் விருப்பங்களுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 15ஐ அடிப்படையாக கொண்டுள்ள Xiaomi 15 Hyper OS 2.0 மூலம் இயங்குவதோடு, 1 டிபி வரை ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டிருக்கிறது.
Xiaomi 15 Pro விவரக்குறிப்புகள்:
Xiaomi 15 ப்ரோ ஆனது LTPO 120Hz ரெஃப்ரஸ் ரேட்டுடன் கூடிய குவாட் மைகோ வளைவு TCL 6.78-இன்ச் AMOLED டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 2K ரெசல்யூஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இந்த மாடலில் 90 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. பேட்டரியை பொருத்தவரையில், 6,100mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. Octa-core Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இயக்கப்படும் Xiaomi 15 ப்ரோ மாடல் 12ஜிபி அல்லது 16ஜிபி ரேம் விருப்பங்களுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 15ஐ அடிப்படையாக கொண்டுள்ள Xiaomi 15 ப்ரோ Hyper OS 2.0 மூலம் இயங்குவதோடு, 1 டிபி வரை ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டிருக்கிறது.
Xiaomi 15 சீரிஸ் கேமரா விபரங்கள்:
Xiaomi 15 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 MP பிரதான கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50 MP அல்ட்ராவைட் சென்சார் உடன் கூடிய ட்ரிபிள் லேயர் கேமரா உள்ளது. மேலும், செல்ஃபிக்களுக்கு 32 MP சென்சார் கொண்ட ஒற்றை முன் கேமரா உள்ளது.
Xiaomi 15 Pro ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 MP பிரதான கேமரா மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 MP சோனி IMX858 டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50 MP அல்ட்ராவைட் சென்சார் உடன் கூடிய ட்ரிபிள் லேயர் கேமரா உள்ளது. மேலும், செல்ஃபிக்களுக்கு முன்புறத்தில் 32 MP சென்சார் கொண்ட ஒற்றை கேமரா உள்ளது.
மேம்படுத்தப்பட்ட கைரேகை அன்லாக்கிங் அனுபவத்திற்காக, Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro ஆகிய இரண்டு மாடல்களிலுமே ஸ்போர்ட் அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வகையான ஸ்கேனர்கள் ஸ்கிரீன் ஈரமாக இருக்கும்போதும் கூட வேகமாகவும், துல்லியமாகவும் வேலை செய்யும். இவை இரண்டு மாடல்களுமே நானோ சிம் கார்டுகளை கொண்ட டியூல் சிம் மொபைல் ஆகும். இதுவரை, அசகுசா கிரீன், பிரைட் சில்வர் எடிஷன், கருப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய ஐந்து நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
Xiaomi 15 சீரிஸ் விலை எவ்வளவு?
சீனாவில் Xiaomi 15 -இன் பேசிக் வேரியண்ட் (12 ஜிபி + 256 ஜிபி) ரூ.52,994 (CNY 4,499) க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த விலையில் இருந்து பார்க்கும்போது, இந்தியாவில் ரூ.79,999 ஆரம்ப விலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல், Xiaomi 15 Pro -இன் பேசிக் வேரியண்ட் (12 ஜிபி + 256 ஜிபி) ரூ.68,293 (CNY 5,299) க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த விலையில் இருந்து பார்க்கும்போது, இந்தியாவில் இதன் விலை ரூ.89,999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், கலர், ஸ்டோரேஜ் மற்றும் ரேம் ஆப்ஷனை பொறுத்து விலை மாறுபடலாம்.
இதையும் படிங்க |சூப்பர் கேமரா.. தனித்துவமான அம்சங்களுடன் களமிறங்கும் Redmi Note 14 சீரிஸ்.. விலை எவ்வளவு?