புது வருடம் 2025 இன்னும் கொஞ்ச நாட்களில் வரப்போகிறது.. அதனால், 2024 ஆம் ஆண்டில் நடந்த சுவாரஸ்யங்களை கொஞ்சம் நினைவுப்படுத்த விரும்புகிறோம். அதன்படி, 2024 ஆம் ஆண்டு உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ்த் திரைப்படங்கள் என்னென்ன என்பதையும், அந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்.
தி கோட் (The Greatest of All Time)
வெங்கட் பிரபு இயத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் தான் 2024 ஆம் ஆண்டு அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படங்களில் முதல் இடத்தில் உள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் டீஏஜிங்க் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியான தி கோடி உலகளவில் ரூ.460 கோடி வசூலித்து மாபெரும் ஹிட் அடித்தது.
அமரன் (Amaran)
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்து வெளியான தமிழ் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “அமரன்” 2024 ஆம் ஆண்டு அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரித்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி காஷ்மீர் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று எடுத்துரைத்த இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்து உலகளவில் ரூ.330 கோடி வசூலித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
வேட்டையன் (Vettaiyan)
மூன்றாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வெளிவந்த ஆக்ஷன் திரைப்படமான “வேட்டையன்” உள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படத்தை லைகா புரொடெக்ஷன் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த நிறைய எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், படம் பெரிய அளவில் ஓடவில்லை. இருப்பினும், உலகளவில் ரூ. 255 கோடி வசூலை குவித்துவிட்டது.
ராயன் (Raayan)
நான்காவது இடத்தில் நடிகர் தனுஷ் நடித்து இயக்கிய ஆக்ஷன் திரைப்படமான “ராயன்” உள்ளது. படத்தின் ஈர்க்கும் கதைக்களம், பட்டைய கிளப்பும் ஆக்ஷன் காட்சிகள், முக்கிய திருப்பங்களுடன் கூடிய தனுஷின் அட்டகாசமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இப்படத்தில் தனுஷுடன் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பார்வையாளர்களிடம் இருந்து நேர்மறை விமர்சனங்களை பெற்றதோடு உலகளவில் ரு.160 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது.
மகாராஜா (Maharaja)
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான “மகாராஜா” 2024 ஆம் ஆண்டு அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், சாச்சனா, அபிராமி, நட்டி நட்ராஜ், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். வித்தியாசமான திரைக்கதையில் உருவான மகாராஜா உலகளவில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.