ஒவ்வொரு பெண்களுக்கும் கர்ப்பம் என்பது தனது வாழ்க்கையில் அனுபவிக்கும் மிக அழகான தருணம். இந்த சமயத்தில், கர்ப்பிணிகள் எந்தவொரு செயலாக இருந்தாலும் பொறுமையுடனும் எச்சரிக்கைவுடனும் செய்ய வேண்டும். குறிப்பாக உணவு விஷயத்தில் மிகவும் கவனம் வேண்டும். பொதுவாக, கர்ப்பமாக இருக்கும்போது நிறைய சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம்.
என்ன தான், அனைத்து உணவுகளும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், ஒரு சில உணவுகள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை பெரியளவில் பாதிக்கலாம். அதனடிப்படையில், கர்ப்பமாக இருக்கும்போது நிறைய பெண்களுக்கு காஃபி குடிக்கலாமா? கூடாதா? என்ற சந்தேகம் இருக்கும். தற்போது, இந்த பதிவில், கர்ப்பிணி பெண்கள் காஃபி குடிப்பது பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கர்ப்பிணிகள் காபி குடிக்கலாமா?
முன்னொரு காலத்தில் கர்ப்பிணிகள் அதிகமாக காஃபி குடித்தால் கருப்பை மற்றும் நஞ்சுக்கொடியில் உள்ள இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும் என்று சொல்லப்பட்டது. மேலும், இது கருவுக்கு இரத்த விநியோகத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், வளர்ச்சியை தடுக்கும், கருச்சிதைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக babycenter.comகுறிப்பிட்ட கட்டுரையின்படி, கர்ப்ப காலத்தில் மிதமான அளவு காஃபி குடிப்பதற்கும், இரத்த நாளம் சுருங்குவது, கருச்சிதைவு மற்றும் முன்கூட்டிய பிரசவம் போன்றவற்றிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால், காஃபி குடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம்?
என்ன தான் கர்ப்பிணிகள் காஃபி குடிக்கலாம் என்று கூறினாலும், ஒரு நாளைக்கு 200 மில்லி கிராமிற்கு மேல் உட்கொள்ள கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 200 மில்லி கிராமிற்கு மேல் காஃபி எடுத்துக்கொள்ள வேண்டாம். இருப்பினும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சில மாதங்கள் வரை காஃபியை பாதியாக குறைப்பது நல்லது. ஏனென்றால், நீங்கள் உட்கொள்ளும் காஃபி தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் செல்லக்கூடும்.
காஃபிக்கு மாற்று ஏதாவது இருக்கா?
காஃபி பிரியராக இருந்தால் எடுத்தவுடன் காஃபியை விட முடியாது. அந்த மாதிரியான சமயத்தில் கீழேக் கொடுப்பட்டுள்ள பானங்களை முயற்சிக்கலாம்.
- தேநீர்
- சுடு தண்ணீர்
- மூலிகை டீ
- மஞ்சள் கலந்த பால்
- புதினா & எலுமிச்சை டீ
இதையும் படிங்க | UPI சேவையில் புதிய அப்டேட்.. பேமெண்ட் Limit அதிகப்படுத்தியாச்சு.. முழுசா தெரிஞ்சிக்கோங்க.