எல்லோருக்குமே மகிழ்ச்சியான அழகான வாழ்க்கை தான் அமைகிறது. ஆனால், இடையில் வரும் பிரச்சனைகளை சரியாக கையாள தெரியாமல் விட்டுவிடுவதால் அது சண்டை அல்லது பிரிவில் முடிந்துவிடுகிறது. எந்த உறவில் தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. வாழ்க்கை என்றால் இன்ப, துன்பங்கள் இருக்க தான் செய்யும். அதை எப்படி புத்திசாலித்தனமாக வென்று காட்டுகிறோம் என்பதில் தான் ஆரோக்கியமான உறவின் (healthy relationship) ஆழமே இருக்கிறது. இதை புரிந்துக்கொண்டாலே உறவில் (relationship) நெருக்கம், பாசம், அன்பு பலமடங்காக அதிகரிக்கும். இதில் பிரிவினை என்ற பேச்சிக்கே இடம் இருக்காது.
ஏனென்றால், ஒரு ஆரோக்கியமான திருமண உறவுக்கு, நம்பிக்கையும், பரஸ்பர ஆதரவும் அவ்வளவு முக்கியம். ஆணோ, பெண்ணோ தன்னுடைய பாட்னர் நம் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறாரா? என்று உணரும் போது மனதில் வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது அல்லவா! அனைவருமே தங்களது வாழ்க்கையில் எதிர்பார்ப்பது அதை தான். தற்போது, இந்த பதிவில் நீங்கள் உங்கள் பாட்னருடன் ஆரோக்கியமான உறவில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற உணர்வை தரும் அறிகுறிகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
நம்பிக்கை
ஒரு ஆரோக்கியமான உறவின் தொடக்கமே நம்பிக்கை என்ற வார்த்தையில் தான் தொடங்குகிறது. எந்த சூழ்நிலையிலும், அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடன் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதுகாப்பாக உணருகிறீர்கள் என்றால் நீங்க ஆரோக்கியமான உறவில் தான் இருக்கிறீர்கள்.
மரியாதை
உங்க பாட்னர் உங்க வார்த்தையை மதிக்கிறார் மற்றும் மரியாதையுடன் நடத்துகிறார். யாரிடமும் உங்களை விட்டுக்கொடுக்காமல் உங்களுடைய சுயமரியாதைக்கு மதிப்பு அளிக்கிறார். பிடித்த விஷயங்களை செய்ய அனுமதிக்கிறார் என்றால் இதுவும் ஒரு நல்ல உறவுக்கான அறிகுறி தான்.
பரஸ்பர ஆதரவு
உங்களுடைய முயற்சிக்கு தோல் கொடுப்பது, நீங்க வெற்றிப் பெறுவதை கண்டு பெருமைக்கொள்வது. தோல்வி அடையும் போது உங்களுக்கு ஆதரவாகவும், அரவணைப்பாகவும் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்றால், உண்மையில் அவர்களுக்கு உங்கள் மீது அளவுக்கடந்த அன்பு உள்ளது என்று அர்த்தம்.
உறவில் உறுதி
உறவில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்காது. அப்படி எத்தனை சண்டை, வெறுப்பு, மனக்கசப்புகள், கருத்து மோதல்கள் வந்தாலும், அவர் உங்களை விட்டு பிரிய ஒருநாளும் நினைக்கவில்லை, நீங்களும் அவரை பிரிய நினைத்தே இல்லை என்றால் அது ஆரோக்கியமான உறவின் முக்கியமான அறிகுறி.
மன்னிப்பு
உங்களை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து கருத்து வேறுபாடு, சண்டைகளுக்கு பிறகும் உங்களிடம் வந்து பேசுகிறார். மன்னிப்பு கேட்கிறார் என்றால் அவருக்கு உண்மையில் உங்கள் மீது அன்பு, பாசம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
வெளிப்படை தன்மை
நீங்களும் உங்க பாட்னரும் எண்ணங்களையும் உணர்வுகளையும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் ஒருவருக்கொருவர் வெளிப்படியாக பகிர்ந்துக் கொள்கிறீர்கள். ஆரோக்கியமான உறவில் ஒருவருக்கொருவர் எந்தவொரு ஒளிவு மறைவும் இல்லாமல் இருப்பது தான் மிகவும் முக்கியம்.