நம்மில் பலருக்கும் காலை எழுந்ததும், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். இவ்வாறு தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவருவதன் மூலம், சரும சுருக்கங்கள் குறைந்து, சருமத்தின் இயற்கையான பொலிவு அதிகரிக்கும். உடலின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நச்சுகள் வெளியேற்றப்படுகிறது. மேலும், குடலில் உள்ள தீங்கு விளைவுக்கும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகிறது. இதனால் குடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. இருப்பினும், வெறும் தண்ணீருடன் சில மசாலாப் பொருட்களை ஊறவைத்து, அந்த தண்ணீரை தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் இரட்டிப்பு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
கொத்தமல்லி தண்ணீர்:
1 ஸ்பூன் கொத்தமல்லியை 1 டம்ளர் தண்ணீரில் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஊறவைத்து விடவும். மறுநாள் காலை பல்துலக்கியதும், இந்த தண்ணீரை வடிகட்டி குடித்துவரவும். இவ்வாறு தொடர்ந்து வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வருவதால், கல்லீரலில் பித்த அமிலங்களின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால், மலச்சிக்கல், வாய்வு, உப்புசம், வயிற்றுப்புண், வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம். குடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
சோம்பு தண்ணீர்:
1 ஸ்பூன் சோம்பை 1 டம்ளர் தண்ணீரில் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஊறவைத்து விடவும். மறுநாள் காலை பல்துலக்கியதும், இந்த தண்ணீரை வடிகட்டி குடித்துவரவும். இவ்வாறு தொடர்ந்து வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீரை குடித்து வருவதால், மலச்சிக்கல், வாய்வு, உப்புசம் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். பெருஞ்சீரகத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, உடல் கொழுப்பைக் குறைக்கும். இதனால், எடையை கட்டுக்குள் வைக்க முடியும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகள் நீக்கி, மிருதுவான ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும். மேலும், பெருஞ்சீரகத்தில் உள்ள செலினியம் என்ற சத்து, நமது உடலில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றுகிறது.
வெந்தய தண்ணீர்:
1 ஸ்பூன் வெந்தயத்தை 1 டம்ளர் தண்ணீரில் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஊறவைத்து விடவும். மறுநாள் காலை பல்துலக்கியதும், இந்த தண்ணீரை வடிகட்டி குடித்துவரவும். இவ்வாறு தொடர்ந்து வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை குடித்து வருவதால், பளபளப்பான ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். அதுமட்டுமல்லாமல், முடி உதிர்வைக் குறைத்து, முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். வெந்தயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தவும், பிடிப்புகள் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
சீரக தண்ணீர்:
1 ஸ்பூன் சீரகத்தை 1 டம்ளர் தண்ணீரில் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஊறவைத்து விடவும். மறுநாள் காலை பல்துலக்கியதும், இந்த தண்ணீரை வடிகட்டி குடித்துவரவும். இவ்வாறு தொடர்ந்து வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடித்து வந்தால், செரிமானத்தை எளிதாக்கும் நொதிகளின் சுரப்பை அதிகரிக்கலாம். இதனால், அஜீரணம், வயிறு உப்புசம், மலச்சிக்கல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்பு மற்றும் வலியை குறைக்கிறது. அதிகப்படியான உடல் உஷ்ணத்தையும் வெகு சீக்கிரம் குறைக்கிறது.