இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர்கள பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுகிறது.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் (நவ.24) இன்றும், (நவ.25) நாளையும், நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 10 அணிகளும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேவையான ஒரு அணியை உரிமையாளர்களும் கேப்டன், பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், விக்கெட் கீப்பர்கள் புதிய அணிகளை தயார் செய்ய முயற்சிப்பார்கள்.
ஏற்கனவே இருந்த அணியில், ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது. தக்கவைத்த வீரர்களை சேர்த்து, ஒவ்வொரு அணியும் தங்களது அணியில், அதிகபட்சமாக 25 வீரர்களையும், குறைந்தபட்சம் 18 வீரர்களையும் சேர்க்க வேண்டும்.
ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 367 இந்திய வீரர்களும், 210 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கும் ஐபிஎல் ஏலம் தொடங்குகிறது.
ஐபிஎல் ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் ஒளிப்பரப்பாகும் நேரலையை இலவசமாக பார்க்கலாம்.