பொதுவாக, சோசியல் மீடியாவில் பிரபலங்கள் தினமும் ஸ்டைலாக ஆடைகளை அணிந்து போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவற்றைப் பார்க்கும்போது நாமும் அவர்களை போல ஆடை அணிய வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதிலும், நயன்தாராவின் ஃபேஷன் ட்ரெண்ட் பற்றி சொல்லவே வேண்டாம்.
பாரம்பரியமான புடவை முதல் மாடர்ன் ட்ரெஸ் வரை அனைத்திலும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருப்பார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பல நடிகைகளும் இவருடைய ஃபேஷன் ட்ரெண்டை தான் பின்பற்றுகிறார்களாம். அந்தளவிற்கு அவருடைய ஃபேஷன் சாய்ஸ் தனித்துவமாக இருக்கும். தற்போது, நயன்தாராவின் ஃபேஷன் சீக்ரெட் என்னவென்று பார்ப்போம்.
ஒயிட் ட்ரெஸ்களுக்கு முக்கியத்துவம்
பெரும்பாலானோருக்கு கருப்பு நிற ஆடைகளை அணிவது மிகவும் பிடிக்கும். காரணம், அது அவர்களுக்கு ஸ்டைலான லுக்கை தருகிறது. ஆனால், நயன்தாரா அப்படியே ஆப்போஷிட். ஆமாங்க! நீங்க கவனித்திருக்கலாம், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள போஸ்டர்களில், பெரும்பாலும் வெள்ளை நிற உடைகளை தான் அணிந்திருப்பார்.
எந்தவிதமான உடையாக இருந்தாலும் அதில் ஒரு பகுதி வெள்ளை நிறமாக தான் இருக்கும். எனவே, க்யூட்டாகவும், ஸ்டைலாகவும் தெரிய வேண்டும் என்று நினைத்தால், வெள்ளை நிற ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
புடவை ஸ்டைலிங்கில் கவனிக்க வேண்டியது
நயன்தாராவின் புடவை ஸ்டைலிங்கிற்கு ஒரு தனிபெரும் ரசிகர் கூட்டமே உண்டு என்று சொல்லலாம். வீட்டு விஷேசங்கள் முதல் விருது விழாக்கள் வரை நயன்தாரா புடவைக்கு அதிக முக்கியத்தும் அளிப்பவர். அவருடைய இந்த பாரம்பரிய லுக் மிகவும் எளிமையானதாகவே இருந்தாலும், அவ்வளவு அழகாக இருக்கும். இதற்கு அவர் அணியும் பிளவுஸ்கள் தான் காரணம்.
ஏனென்றால், நன்றாக கவனித்து பாருங்கள் அவர் அணியும் பிளவுஸ்கள் பெரும்பாலும் ஸ்லீவ்லெஸ் (sleeveless) மற்றும் புடவைக்கு மாறுபட்ட நிறத்தில் (contrast blouse) தான் இருக்கும். இதுதான் அவருக்கு தனித்துவமான லுக்கை தருகிறது. எனவே, புடவை அணியும்போது முடிந்தவரை ஸ்லீவ்லெஸ் அல்லது கான்ட்ரெஸ்ட் பிளவுஸ்களை தேர்ந்தெடுங்கள்.
டாப்ஸ் மற்றும் ப்ரிட்டட் ஸ்கர்ட்
நயன்தாராவிற்கு டாப்ஸ் மற்றும் ப்ரிட்டட் ஸ்கர்ட் (printed skirt) அணிவது மிகவும் பிடிக்குமாம். நடிகை என்பதால், அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருக்கும். பொதுவாக, பயணத்தின் போது டாப் மற்றும் ஸ்கர்ட் செட் வசதியாக இருக்கும். நீங்கள் கவனித்து பாருங்கள், அவர் அணியும் டாப்ஸ் ஹால்ஃப் ஸ்லீவ்வாக இருந்தால், ஃபுல் ஸ்கர்ட்டாக இருக்கும்.
அதுவே, டாப் ஃபுல் ஸ்லீவ்வாக இருந்தால், மினி ஸ்கர்ட்டாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், அவர் அணியும் எந்த ஸ்கர்ட்டாக இருந்தாலும், அது பிரிட்டட்டாக தான் இருக்கும். எனவே, டாப், ஸ்கர்ட் காம்பினேஷனில் உடை அணியும்போது இந்த ட்ரெண்டைப் பின்பற்றுங்கள்.
ஆக்சஸெரீஸ்கள் அதிகம் வேண்டாம்
திருமணம், சிறப்பு நிகழ்வு அல்லது சாதாரண பயணம் என எதுவாக இருந்தாலும் சரி, சரியான அணிகலன்கள் எந்த ஆடையையும் அழகாகவும் ஸ்டைலாகவும் மாற்றும். அதை தான் நயன்தாராவும் பின்பற்றுகிறார்.
மேற்கத்திய உடைகள் அல்லது இந்திய உடைகள் என எதுவாக இருந்தாலும், நிறைய ஆக்சஸெரீஸ்களை அணியமாட்டார். சில சமயங்களில் ஆக்சஸெரீஸ்கள் அணியாமல் கூட இருப்பார். இதுவே அவரை தனித்துக் காட்டுகிறது. எனவே, எந்த உடை அணிந்தாலும் ஆக்சஸெரீஸ்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதும் ஒரே நிறத்திற்கு முக்கியத்துவம்
நயன்தாரா பெரும்பாலும், டாப் மற்றும் பேண்ட் இரண்டையுமே ஒரே நிறத்தில் தான் அணிவார். இதுவும், ஒரு தனித்துவமான லுக்கை கொடுக்கிறது. லுக்கை மேலும் ஸ்டைலாக்க சன்கிளாஸ் அணிந்துக் கொள்கிறார்.
எனவே, புடவையை தவிர்த்து மற்ற உடைகள் எதுவாக இருந்தாலும், ஒரே வண்ணத்தில் அணிந்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ஸ்டைலிஸாக இருப்பீர்கள்.